காணாமல் போன சிறுமி... மாங்காடு பகுதியில் பிணமாக மீட்பு!

Girl child murder

கடந்த ஞாயிற்றுக்கிழமை தங்களது 7 வயது பெண் குழந்தையான ஹாசினியை தாங்கள் வசித்து வந்த  அபார்ட்மென்ட்டில் தனியாக விட்டுவிட்டு கடைக்குச் சென்றிருக்கின்றனர் சென்னை வாழ் தம்பதியர். திரும்பி வந்து பார்க்கையில் ஹாசினி வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார். அதிர்ச்சி அடைந்த தம்பதி, ஹாசினியை அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால், காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர் ஹாசினியின் பெற்றோர்.

இதனையடுத்து, ஹாசினி வசித்து வந்த சுற்றுப்புறத்தில் விசாரணை நடத்தியுள்ளனர் போலீஸார். அபார்ட்மென்ட்டில் வைத்திருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளையும் காவலர்கள் ஆராய்ந்துள்ளனர். ஹாசினி அபார்ட்மென்ட்டில் இருந்து வெளியே போகவில்லை என்று கண்டுபிடித்துள்ளனர். விசாரணையில், ஹாசினி வசித்து வந்த அபார்ட்மென்ட் இருக்கும் இடத்திலேயே வசித்து வந்த 22 வயதான மெக்கானிக்கல் என்ஜினியர் ஜஸ்வந்த் மீது சந்தேகித்துள்ளனர் போலீஸார். அவர், ஹாசினியைக் கடத்த முயன்றதாகவும், அப்படி முயல்கையில் ஹாசினி கத்தாமல் இருக்க வாயைப் பொத்தியதாகவும் அப்போது மூச்சுத்திணறி ஹாசினி இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்பின், அவரை ஒரு பையில் போட்டு, மாங்காடு அருகே கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டதாக போலீஸ் கூறுகிறது. ஜஸ்வந்த் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.  

(நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!