நிரந்தர ஆளுநர் நியமனம் தாமதம் ஏன்? கி.வீரமணி கேள்வி

தமிழ்நாட்டில் இன்னும் நிரந்தர ஆளுநர் நியமனம் செய்யாமல் இருப்பது ஏன் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண அரசியல் சூழ்நிலைக்கு அடிப்படைக் காரணங்களில் ஒன்று, கடந்த பல மாதங்களாக நிரந்தர ஆளுநரை மத்திய அரசு நியமிக்காமல் தள்ளிக்கொண்டே, பொறுப்பு ஆளுநரை அதுவும் மகராஷ்டிரா ஆளுநரை நியமனம் செய்ததால், ஆளுநர் பணியைக் குடியரசு நாளில்கூட அவர் செய்யவேண்டியதை முதல்வர் செய்தார் என்பது ஒரு சிறு எடுத்துக்காட்டு.

அதுபோலவே ஜனநாயகம் தமிழ்நாட்டில் எங்கே தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுவிடுமோ என்ற கவலை பல முற்போக்கு ஜனநாயகவாதிகளிடம் இருப்பதற்குக் காரணம், உடனடியாக தமிழ்நாட்டுக்கு நிரந்தர ஆளுநரை மேலும் காலந்தாழ்த்தாமல் நியமிக்கவேண்டும். அந்த நியமனம் என்ன அவ்வளவு கடினமானதா" என்று கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!