தொலைக்காட்சிப் பேட்டியில் கண்ணீர் விட்ட சசிகலா

sasikala

நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு வி.கே.சசிகலா பேட்டியளித்துள்ளார். அதில், 'நான்தான் இத்தனை ஆண்டுகளாக அம்மாவைப் பார்த்துக்கொண்டேன். அம்மா எவ்வளவு வலியைத் தாங்கினார்கள் என எனக்கு மட்டுமே தெரியும். அம்மா மரணம் தொடர்பான எந்த விசாரணைக்கும் தயார். அம்மா மறைந்த போது நான் அனுபவித்த வேதனை எனக்கு மட்டுமே தெரியும்' எனக் கண்ணீர் விட்டார்.

sasikala

மேலும் அவர்,  'நான்தான் கட்சியை வழிநடத்த வேண்டும் எனக் கட்சியினர் கேட்கின்றனர். யார் இந்தப் பன்னீர் செல்வம் எனக் கேட்கின்றனர். 100% நான்தான் தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்பேன். என்னிடம் நன்றாகப் பேசிக்கொண்டே இவ்வளவு பச்சையான துரோகத்தைச் செய்துள்ளார் பன்னீர்செல்வம்' என காட்டமாகக் கூறினார்.

நன்றி: NEWS18 தமிழ்நாடு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!