அதிமுக எம்.எல்.ஏக்களின் டெல்லி பயணம் ரத்து

mla

தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் சென்னையில் இருந்து டெல்லி செல்வதாக இருந்தனர். இந்நிலையில் எம்.எல்.ஏக்களின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிமுக பெண் எம்.எல்.ஏக்கள் டெல்லி செல்வதற்காக விமான நிலையம் வந்திருந்தனர். திடீரென வந்த தொலைபேசி அழைப்பு காரணமாக எம்.எல்.ஏக்களின் டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது. 

vidyasagar rao

மேலும், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை மதியம் சென்னை வர இருக்கிறார். அவரை அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் நேரில் சந்திக்க இருப்பதாக அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!