ஓ.பன்னீர் செல்வத்துக்கு சீமான் ஆதரவு

seeman

தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வமே தொடர 'நாம் தமிழர்' கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் நடந்த தனது கட்சி தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு பேசிய அவர், 'முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் போன்று சசிகலாவால் திறம்பட பணியாற்ற முடியாது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைப்பதாக ஓ.பி.எஸ் கூறியிருப்பது காலம் தாழ்ந்த ஒன்று. மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்போலோ மருத்துவர்கள் அளித்துள்ள விளக்கம் சந்தேகத்தை கிளப்பியுள்ளது' என பேட்டியளித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!