எடப்பாடி பழனிச்சாமியை புதிய முதல்வராக்க முயற்சி?

                எடப்பாடி பழனிச்சாமி

டந்த ஞாயிற்றுக் கிழமை அ.தி.மு.கவின் சட்டமன்ற உறுப்பினர்கள் சசிகலாவை சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வு தேர்வு செய்யப்பட்டார். சசிகலா, புதிய முதல்வராக பதவி ஏற்க கூடிய சூழ்நிலையில், ஓ.பன்னீர் செல்வம் திரி கொளுத்திப் போட்டார். கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் வாங்கினார்கள் என பன்னீர் செல்வம் சொன்னதற்குப் பிறகு தமிழக அரசியல் சூழல் மாறிப்போனது.

ஜெயலலிதா மறைவு குறித்து விசாரணை கமிஷன் அமைப்பேன் என அடுத்த அதிரடியைக் கிளப்பினார் ஓ.பி.எஸ். இப்படிப்பட்ட சூழலில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மீண்டும் அக்கட்சியின் தலைமைக் கழக அலுவலகத்தில் நடை பெற்றது.

அதன்பின்னர் எம்.எல்.ஏக்கள் அனைவரும் பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டு நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் 6 பேர் பகிரங்கமாக ஓ.பன்னீர் செல்வத்துக்கு தங்களின் ஆதரவைத் தெரிவித்துவிட்டனர்.

முதல்வர் ஓ.பி.எஸ்.அளித்த அதிரடி பேட்டிக்குப் பிறகு சசிகலா மீதான எதிர்ப்புக் கட்சியினரிடம் அதிகரிக்கத் தொடங்கியது.இப்படிப்பட்ட சூழலில் சசிகலா,முதல்வர் பொறுப்பை ஏற்க தயங்குவதாக ஒரு தகவல் கட்சியினர் மத்தியில் உலாவருகிறது.

                  எடப்பாடி பழனிச்சாமி

புதன்கிழமை மாலை நடந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில்,வந்திருந்த அனைத்து எம்.எல்.ஏக்களிடமும் கையெழுத்துப் பெறப்பட்டுள்ளது. அது எதற்காகப் பெறப்பட்டது என்ற விவரம் முழுமையாக வெளிவரவில்லை. ஆனால் சசிகலாவுக்குப் பதிலாக எடப்பாடி பழனிச்சாமியை தமிழக முதல்வராக்கலாம் என்பதற்கு கையெழுத்துப் பெறப்பட்டு இருக்கலாம் என்றும் அ.தி.மு.கவினர் மத்தியில் பேச்சு நிலவுகிறது.

- பரகத் அலி             

Do you like the story?

Please Appreciate the Author by clapping!