டெல்லியில் அதிமுக எம்பிக்கள்!

டெல்லியில் அதிமுக எம்பிக்கள்

சிகலா முதல்வராகப் பதவியேற்பது தொடர்பாக தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் தரப்பில் இருந்து, இதுவரை எந்தத் தகவலும் வராத நிலையில், அதிமுக எம்பிக்கள் இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்கின்றனர். ஜனாதிபதி தலையிட்டு, தமிழகத்தில் சசிகலா தலைமையிலான புதிய ஆட்சியை அமைக்க கவர்னர் அழைப்பு விடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் அதிமுக எம்.பிக்கள் இந்தச் சந்திப்பில் வலியுறுத்த உள்ளனர்.

இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் சென்னை வருகிறார். இதனால் ஜனாதிபதியைச் சந்திக்க டெல்லி செல்ல இருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்களின் பயணம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கவர்னரைச் சந்திக்க உள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!