ஜெ. மரணத்தில் சந்தேகம்! பன்னீர்செல்வத்தை சந்தித்த பின் மதுசூதனன் பகீர்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கருதுகிறேன் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த பின்னர் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

அதிமுக அவைத் தலைவராக மதுசூதனன் இருந்து வருகிறார். சசிகலா ஆதரவாளராக செயல்பட்டு வந்த மதுசூதனன் இன்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை திடீரென சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மதுசூதனன், "யாருடைய வற்புறுத்தலும் இன்றி பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றவர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கருதுகிறேன்.

எம்ஜிஆர் தொடங்கிய மாபெரும் இயக்கம் ஒரு குடும்பத்துக்குள் அடங்கிவிடக்கூடாது. அதிமுக, ரவுடிகளின் கூடாரமாக மாறிவிடக்கூடாது.
எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அதிமுக காக்கப்பட வேண்டும். சசிகலாவை அதிமுகவினர் நிராகரிக்க வேண்டும். காப்பாற்றப்பட வேண்டிய நிலையில் அதிமுக இருக்கிறது. தவறானவர்களின் கைகளில் அதிமுக இருக்க நான் விரும்பவில்லை. அதிமுகவினரின் ஒவ்வொரு தொண்டரும் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்" என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!