மக்களோட தலையெழுத்து 135 பேர்கிட்ட இருக்கு: நடிகர் விசு உருக்கம்

நடிகர் விசு

மிழ்நாட்டு அரசியல் சூழல் பரபரப்பாக இருக்கும் சூழலில், இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார் சசிகலா. இந்நிலையில் நடிகர் விசு உணர்ச்சிபூர்வமாகப் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவ்வீடியோவில் அவர் பேசிய விவரங்கள்...

"இப்போ தமிழ்நாட்டோட பொலிடிக்கல் சூழ்நிலை என்னன்னு உங்களுக்கு நல்லா தெரியும். 

மிஸ்டர் பன்னீர்செல்வம் கவர்னர் மாளிகையை நோக்கிப் போயிருக்காரு. அவருக்கு அஞ்சு மணிக்கு அப்பாயின்ட்மென்ட். அஞ்சுங்கிறதை எதுக்குச் சொல்லுவோம். பஞ்ச பூதங்களுக்குச் சொல்லுவோம். பஞ்ச பாண்டவர்களுக்குச் சொல்லுவோம். இதெல்லாம் பாசிட்டிவ் சைடு.

சசிகலாம்மாவுக்கு ஏழரை மணிக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்திருக்காங்க. ஏழரைன்னு எதுக்குச் சொல்லுவோம்னு உங்களுக்கே நல்லா தெரியும்.

என்னடா இப்படிச் சொல்றேன்னு நினைக்காதீங்க. கிட்டத்தட்ட ஆறு வருஷங்கள் ஜெயா டிவிக்காக நான் மக்கள் அரங்கம்ங்கிற நிகழ்ச்சியை நடத்தினேன். முதல்ல ஒருநாள் மேடம் புரட்சித்தலைவியைப் பார்த்ததோட சரி. அதுக்கப்புறம் என்னை ஒருதடவைகூட பார்க்க விடலை. நானும் வெளிலயும் சொல்ல முடியல.

மிஸ்டர் பன்னீர்செல்வம் எவ்ளோ கஷ்டப்பட்டாரோ இப்போ, அதே கஷ்டம்தான் எனக்கும். ஜெயலலிதாவைப் பார்க்கவே முடியல. இத்தனைக்கும் பப்ளிக்கை வெச்சு நான் ஷோ பண்ணிட்டு இருந்தேன். அப்போ என்ன நடக்குது, ஏது நடக்குதுன்னு நான் போய்ச் சொல்லணும் இல்லையா. ஆனா சொல்லவே முடியல.  யார் யார் எல்லாமோ வந்தாங்க. என்னன்னம்மோ இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்தாங்க. அவர் ஆளு கொடுக்குறதை, அடுத்த ஆள் மாத்திச் சொல்லுவான். இப்படித்தான் யாரோ ஒரு குடும்பமா..என்னன்னு எனக்கு ஒண்ணுமே புரியல. இதுக்கூட நடக்குமான்னு நீங்க யோசிக்கலாம். யோசனை பண்ணிப் பாருங்க. 

 

 

மேடம் இறந்த பொழுது அவங்க பக்கத்துல யாரு நின்னாங்க. யார் யாரோ நின்னாங்க. இதேதான் அவங்க ஆட்டிடியூட். ஒருவேளை அரசாங்கத்தை அவங்க கையில ஒப்படைச்சா அங்கயும் யார் யாரோ வருவாங்க. என்னன்னம்மோ பண்ணுவாங்க. நான் இதை மக்கள்ட ஒண்ணும் கேட்க முடியாது. இந்த மக்களோட தலையெழுத்து 135 (எம்.எல்.ஏ.க்களை) பேர்கிட்ட இருக்கு. நான் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக்கிறேன். எங்க வாழ்க்கை உங்ககிட்ட இருக்கு. ப்ளீஸ். ப்ளீஸ். சப்போர்ட் மிஸ்டர் ஓபிஎஸ் அண்ட் டெஃபனட்லி நாட் சசிகலா" இவ்வாறு கூறியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!