அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் எங்கே? டி.ஜி.பி.யிடம் கேட்ட ஆளுநர் | TN DGP meets Governor at Raj bhavan

வெளியிடப்பட்ட நேரம்: 12:06 (10/02/2017)

கடைசி தொடர்பு:17:19 (10/02/2017)

அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் எங்கே? டி.ஜி.பி.யிடம் கேட்ட ஆளுநர்

தமிழக சட்டம்- ஒழுங்கு குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் டி.ஜி.பி. விளக்கம் அளித்தார். அப்போது, அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் எங்கிருக்கிறார்கள் என்பது பற்றி ஆளுநர் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று சென்னை வந்தார். இதையடுத்து முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோர் தனித்தனியாக ஆளுநரை சந்தித்தனர். அப்போது இருவரும், ஆட்சியமைப்பது குறித்து ஆளுநரிடம் உரிமை கோரினர்.

DGP meets Governor

இந்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவை, தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் இன்று சந்தித்துப் பேசினர். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நடந்து வருகிறது.

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் எங்கிருக்கிறார்கள் என்பது பற்றி ஆளுநர் கேட்டறிந்ததாகக் தெரிகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க