அதிமுகவில் இருந்து மதுசூதனன் நீக்கம்!

அதிமுகவில் இருந்து அவைத்தலைவர் மதுசூதனன் நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா வெளியிட்டுள்ளார். மதுசூதனன் நேற்று முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார். இதையடுத்து அவர் சசிகலா மீது சரமாரியாக குற்றச்சாட்டுகள் வைத்தார்.

Mathusoothanan

இதற்கிடையே அவைத் தலைவர், அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் மதுசூதனன் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக செங்கோட்டையன் அதிமுக அவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சிக்குக் களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி மதுசூதனனை நீக்கியுள்ளார் சசிகலா. இந்நிலையில், 'தன்னை கட்சியில் இருந்து யாரும் நீக்க முடியாது என்றும், அதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை' என்றும் மதுசூதனன் கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!