வெளியிடப்பட்ட நேரம்: 16:17 (10/02/2017)

கடைசி தொடர்பு:17:03 (10/02/2017)

தாய்க்குக் கோயில் கட்டிய மகன்கள்!

திருச்சி துவாக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜராஜசோழன் என்பவரின் தாய் அமுதா, கடந்த வருடம் ஜனவரி 24-ம் தேதி உயிரிழந்தார். அதன் பிறகு, தாயின் பிரிவைத் தாங்க முடியாமல் தவித்த ராஜராஜசோழன் மற்றும் அவரின் சகோதரர்கள் நான்கு பேரும் சேர்ந்து, தங்கள் தாய்க்குக் கோயில் கட்ட ஒருமனதாக முடிவுசெய்தனர். அதன்படி, அவர்களுக்கு சொந்தமான மற்றொரு இடத்தில் கோயில் கட்டப்பட்டு வந்தது.

இந்நிலையில், தங்கள் அம்மா அமுதாவுக்காக, உருவாக்கப்பட்ட திருக்கோயில் திறப்பு மற்றும் சிலை திறப்பு விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு, ஏழைகளுக்கு அன்னதானமும், இலவச வேட்டி சேலைகளும் வழங்கி, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தாய் அமுதா மீது, அவரது ஐந்து மகன்கள் வைத்திருந்த பாசத்தைக் கண்டு விழாவுக்கு வந்தவர்கள் மெய்சிலிர்த்துப்போனார்கள்.

- சி.ய.ஆனந்தகுமார்

படங்கள்: தே.தீட்ஷித்

நீங்க எப்படி பீல் பண்றீங்க