வெளியிடப்பட்ட நேரம்: 16:13 (10/02/2017)

கடைசி தொடர்பு:17:17 (10/02/2017)

'சசிகலாவை நான் நீக்கிவிட்டேன்'- மதுசூதனன் அதிரடி

கட்சியில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது; சசிகலாவை நான் நீக்கிவிட்டேன் என்று அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

சட்டமன்ற அ.தி.மு.க தலைவராக பொதுச் செயலாளர் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து முதல்வர் பதவியை பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். இதனிடையே, கடந்த 7-ம் தேதி இரவு ஜெயலலிதா சமாதிக்கு சென்ற பன்னீர்செல்வம், நாற்பது நிமிடம் தியானம் மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், சசிகலா மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். இதையடுத்து, கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். இதனிடையே, சசிகலாவின் தலைமையை விரும்பாத கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பன்னீர்செல்வத்துக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்தனர். இதில் முக்கியமானவர் மதுசூதனன்.

பன்னீர்செல்வத்தை நேற்று சந்தித்து ஆதரவு தெரிவித்த நிலையில், இன்று அவைத் தலைவர் பதவியில் இருந்து மதுசூதனை நீக்கினார் சசிகலா. புதிய அவைத்தலைவராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டார். இந்த சூழ்நிலையில் பன்னீர்செல்வம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவைத் தலைவர் மதுசூதனன், என்னை யாரும் நீக்க முடியாது; என்னை நீக்க யாருக்கும் அதிகாரமில்லை. நான் சசிகலாவை நீக்கிவிட்டேன் என்று அதிரடியாக கூறினார்.

நத்தம் விஸ்வநாதன் கூறுகையில், "சசிகலா தற்காலிக பொதுச் செயலாளராக உள்ளதால் மதுசூதனை நீக்க அவருக்கு அதிகாரம் இல்லை" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க