வெளியிடப்பட்ட நேரம்: 19:02 (10/02/2017)

கடைசி தொடர்பு:19:12 (10/02/2017)

'அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு விரைவில் தேர்தல்' - மதுசூதனன்

முதல்வர் பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் மதுசூதனன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 'எம்.ஜி.ஆர் கொண்டு வந்த அதிமுக சட்டத்தின்படி விரைவில் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும். தொண்டர்களால் தேர்வு செய்யப்படுவர்கள்தான், பொதுச்செயலாளராக முடியும்.

Madhusudhanan

பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். அதிமுக வரலாற்றில் தற்காலிக பொதுச்செயலாளர் என்பதே இல்லை. மேலும், கழக சொத்துப் பாதுகாப்புக் குழு விரைவில் அமைக்கப்படும். விரைவில் பொதுக்குழு கூட்டி இது குறித்து முடிவு எடுக்கப்படும்' என்றார்.

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில், 'உங்களை கட்சியில் இருந்து சசிகலா நீக்கியுள்ளாரே' என்று நிருபர் கேட்டார். அதற்கு மதுசூதனன், 'அதற்கு முன்னே நான் அந்த அம்மையாரை நீக்கிவிட்டேன்' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க