வெளியிடப்பட்ட நேரம்: 02:35 (11/02/2017)

கடைசி தொடர்பு:16:35 (11/02/2017)

செவ்வாய்க்கிழமை சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு?

டெல்லி உச்சநீதிமன்றம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்திய சொத்துக்குவிப்பு வழக்கு, தற்போது சசிகலாவுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கின் தீர்ப்பை எதிர்நோக்கி, சசிகலாவின் முதல்வராக பதவியேற்கும் நிகழ்வும் தள்ளிப்போகிறது. இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு வரும் திங்கள் அல்லது செவ்வாய்கிழமை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ள உச்சநீதிமன்ற நீதிபதி அமித்வா ராய் வரும் திங்கட்கிழமை விடுமுறை எடுப்பதாகவும், அதனால் இவ்வழக்கின் தீர்ப்பு செவ்வாய்கிழமை அல்லது புதன்கிழமை வெளியாகலாம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க