ஆளுநர் தாமதத்துக்கு இதுதான் காரணம்! பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழக ஆளுநர் நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டு வருவது குறித்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார்.

சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன்,
தமிழக அரசியல் நிலவரம் குறித்து சட்ட வல்லுநர்களை ஆலோசித்து ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும் என்றார்.

ஆளுநரின் கடமை என்பது ஆழ்ந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்று கூறிய பொன்னார், பொறுப்பு ஆளுநர் என்பதைவிட பொறுப்புடன் செயல்படுகிறாரா என்பதைதான் பார்க்க வேண்டும் என்றார்.

ஆளுநர் எடுக்கும் முடிவு ஏழு கோடி தமிழர்களின் நலன் சார்ந்து எடுக்க வேண்டிய முடிவு என்று தெரிவித்த அவர், கழகங்கள் இல்லாத தமிழ்நாடு இருக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என்றார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!