வீடு வாங்கப் போறீங்களா? இதையெல்லாம் சரிபார்த்துக்கோங்க! | Before buying house consider these points

வெளியிடப்பட்ட நேரம்: 12:04 (12/02/2017)

கடைசி தொடர்பு:12:04 (12/02/2017)

வீடு வாங்கப் போறீங்களா? இதையெல்லாம் சரிபார்த்துக்கோங்க!

வீடு கட்ட வேண்டிய மனையானது அரசு அமைப்புகள் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (CMDA -Chennai Metropolition Development Authority) அல்லது நகர ஊரமைப்பு இயக்கம் (DTCP - Directorate of Town and Country Planning) ஆகிய அமைப்பினால் அங்கீகாரம் பெற்றிருத்தல் வேண்டும். 

வீடு, மனை, பிளாட்

நிலத்திற்கு அங்கீகாரம்!

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) ஆனது சென்னை, எழும்பூர், தாழமுத்து நடராஜன் மாளிகையில் அமைந்துள்ளது. சிஎம்டிஏ ஆனது இரண்டாம் பெருந்திட்டத்தில் (Second Masterplan) உட்பட்ட மற்றும் சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளின் நிலத்திற்கு அங்கீகாரம் அளித்து வருகிறது. 

சென்னை மாநகராட்சிக்கு அப்பாற்பட்ட பகுதி, ஊராட்சி மற்றும் நகராட்சியாக மாறாத நிலப் பகுதிகளில் (Rural and Semiurban lands) வீடு கட்ட, கட்டிட அனுமதி நகர ஊரகமைப்பு இயக்கத்தினால் (DTCP) அங்கிகாரம் வழங்கப்பட்டு வருகிறது. நகர ஊரமைப்பு இயக்கத்தின் தலைமை அலுவலகம் (DTCP -Head Office) சென்னை, அண்ணாசாலையில் இயங்கி வருகிறது. 

இந்த நிலையில் சிஎம்டிஏ, டிடீசிபி மற்றும் பஞ்சாயத்து அப்ரூவல் மனை குறித்தும், வீடு, பிளாட் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து சொத்து ஆலோசகர் பார்த்தசாரதிடம் பேசினோம். 

அதிகாரம் கிடையாது!

"பஞ்சாயத்துத் தலைவர் அவர்களால் வீட்டு மனை பிரிவுகளுக்கு அங்கீகாரம் அளிக்க இயலாது. ஆகையால் பஞ்சாயத்து அங்கீகாரம் பெற்ற மனைகள் வாங்கக் கூடாது. டிடீசிபி அல்லது சிஎம்டிஏ அங்கீகாரம் அளிக்கப்பட்ட மனைகள் மட்டும் வாங்குவது நல்லது. 
பஞ்சாயத்துத் தலைவர் அரசு அங்கீகாரம் பெற்ற (நகர ஊரமைப்பினால் மட்டும்) மனை பிரிவில் உள்ள மனைகளுக்குக் கட்டிடம் கட்ட (G + 1) 4000 ச.அ பரப்பளவு கட்டிடம், நான்கு சமையலறை கொண்ட கட்டிடத்திற்கு அல்லது வணிக கட்டிடமாக இருந்தால் 2000 ச.அ பரப்பளவு (G + 1) கொண்ட கட்டிடங்களுக்கு மட்டும் அங்கிகாரம் வழங்கலாம். (அரசு விதிகளுக்கு உட்பட்டுவாரு இருக்க வேண்டும் அந்த வரைபடம்) 
அரசு அனுமதி பெற வரையறுக்கப்பட்ட கட்டிட வரைபடம் ஏழு நகல் (7 copy) மூன்று தொகுப்பு மனுக்கள் அளிக்க வேண்டும்.

பின்பு அதற்கான கட்டணம் வசூலித்த பின்பு அதிகாரிகள் 15 நாட்களுக்குள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பின்பு அங்கீகாரம் கொடுக்கப்படும். 15 நாட்களில் ஆய்வு மேற்கொள்ளவில்லையெனில் தாங்கள் கொடுக்கப்பட்ட மனுவின் நகலுடன் சென்று அந்த அலுவலகத்தின் மேலாளரை அணுகலாம். அங்கீகாரம் பெற்ற வரைபடத்தில் இருக்குமாறு கட்டிடம் கட்டப்பட வேண்டும். மீறினால் அரசினால் அளிக்கப்படும் அரசு குடிநீர் இணைப்பு மற்றும் மின்சார இணைப்புகளும் வழங்கப்படமாட்டாது. 

வீடு கட்ட அனுமதி பெற தேவையான ஆவணங்கள்! 

நிலத்தின் உரிமையாளரின் பெயரில் இருக்கும் கிரய பத்திரம் (sale deed or power of atorney) 

பட்டா உரிமையாளரின் பெயரில் இருக்கும் அசல். 

வில்லங்க சான்று சமர்ப்பிக்கும் முன் தேதி வரை இருக்க வேண்டும். (EC - Encambrance Certificate) 

வரையறுக்கப்பட்ட கட்டிட வரைபடமானது (Building Plan) சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் அல்லது நகர ஊரமைப்பு இயக்கம் ஆகிய அமைப்பில் பதிவு செய்த பொறியாளராக இருக்க வேண்டும். 

வீடு வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள்! 

வீட்டு மனையின் பத்திரம் உரிமையாளரின் பெயரில் உள்ளதா மற்றும் அவரிடம் அசல் பத்திரம் மற்றும் மூல பத்திரம் உள்ளதா எனவும் அறிய வேண்டும். 

உரிமையாளரின் பெயரில் பட்டா உள்ளதா எனச் சரிபார்க்க வேண்டும். 

வில்லங்க சான்று (EC) இதில் எந்த வில்லங்கமும் இருத்தல் கூடாது என ஆராய வேண்டும். 

வீடு மனை மற்றும் வீடு கட்டிடத்தின் வரைபடம் அரசின் அமைப்பினால் அங்கீகாரம் பெற்றவையா எனப் பார்க்க வேண்டும். 

வீட்டின் பராமரிப்பு மற்றும் தன்மை எவ்வாறு உள்ளது எனப் பார்க்க வேண்டும். 

உரிமையாளரின் பெயரில் சொத்து வரி, மின்சார வரி, குடிநீர் வரி உள்ளதா எனவும் மற்றும் அன்றைய அல்லது தற்போதைய காலம் வரை செலுத்திருக்க வேண்டும். 

எல்லா அசல் ஆவணங்களையும் வழக்கறிஞர்களின் உதவியுடன் ஆராய்ந்து சான்றிதழ் அல்லது அவரின் ஆலோசனை படிவம் பெற வேண்டும். 

இத்துடன் கட்டிட பொறியாளரின் ஆலோசனை பெறுவது நல்லது" என்றார்.

சோ.கார்த்திகேயன்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்