வெளியிடப்பட்ட நேரம்: 11:46 (12/02/2017)

கடைசி தொடர்பு:17:47 (12/02/2017)

ஓ.பி.எஸ். அணியில் மேலும் ஒரு எம்.பி!

முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு மேலும், ஒரு எம்.பி ஆதரவு தெரிவித்துள்ளார். அதன்படி, பெரம்பலூர் தொகுதி எம்.பி மருதராஜா, பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். இன்று மட்டும் மூன்று எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன்மூலம் ஓ.பிஎஸ்க்கு மக்களவை உறுப்பினர்கள் ஆதரவு எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

படம்: ப.சரவணகுமார்

அதேபோல் மைத்ரேயன் மற்றும் சசிகலா புஷ்பா ஆகிய இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன்மூலம் ஓ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க