’சமூக வலைத்தளங்களின் கதாநாயகன் ஓ.பன்னீர்செல்வம்’ : ராமராஜன்

Ramarajan

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நடிகர் ராமராஜன் நேரில் ஆதரவு தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரும், அதிமுக பிரமுகருமான ராமராஜன், ‘ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓபிஎஸ். சமூக வலைத்தளங்களின் கதாநாயகன் ஓபிஎஸ். அண்ணா மூன்றெழுத்து, எம்.ஜி.ஆர் மூன்றெழுத்து, அம்மா மூன்றெழுத்து, இந்த மூவரின் பெருமையை நிலைநாட்டும் மூன்றெழுத்து தான் ஓபிஎஸ்’, என்று புகழாரம் சூட்டினார்.

Ramarajan

பன்னீர்செல்வத்திற்கு அரசியல் பிரமுகர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். முன்னர் நடிகர் மற்றும் இயக்குநர் பாக்யராஜ், இயக்குநர் பாலா உள்ளிட்டோர் முதல்வரை நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

படங்கள்: ப.சரவணகுமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!