கூவத்தூரில் செய்தியாளர்கள் தர்ணா!

Koovathur Journalist Dharna

தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்து கடந்த சில நாட்களாக பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் கூவத்தூரில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த சில நாட்களாக தங்கி இருக்கின்றனர். தற்போது அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவும் அங்கு சென்று எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில், அங்கு ஏராளமான பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிப்பதற்காக முகாமிட்டுள்ளனர்.

இதையடுத்து பத்திரிகையாளர்களுக்கு எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள விடுதியை நெருங்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

'ரிசார்ட்டுக்கு 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு முன்னிருந்தே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ரிசார்ட்டு பகுதிக்கு செல்லும் மக்களை போலீசார் தடுக்கின்றனர்' என்று கூறுகின்றனர் களத்தில் இருக்கும் செய்தியாளர்கள்.

செய்தியாளர்கள் மீது குண்டர்கள் தாக்குதல் நடத்துவதாகவும் அலைபேசியை பறிப்பதாகவும் கூறுப்படுகிறது. இந்த அனைத்துக்கும் காவல்துறை மௌனம் காப்பதாகவும் பத்திரகையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் கூறி சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் பத்திரிகையாளர்கள்.

இதையடுத்து அ.தி.மு.க தரப்பு நிர்வாகிகள் பத்திரிகையாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

படம்- ஜெயவேல்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!