வெளியிடப்பட்ட நேரம்: 19:59 (12/02/2017)

கடைசி தொடர்பு:20:02 (12/02/2017)

'யாரையும் அடைத்து வைக்கவில்லை...!'- சசிகலா பேட்டி

Sasikala

அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா கூவத்தூரில் இருக்கும் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் சசிகலா செய்தியாளர்கள் மத்தியில் பேட்டியளித்தார்.

'யாரையும் அடைத்து வைக்கவில்லை. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் சுதந்திரமாக உள்ளனர். இங்கிருந்து சென்றவர்களும், எதிரிக் கட்சியினுரும் தான் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். குடும்பங்களுடன் இங்கிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பில்தான் இருக்கின்னர். அரசுக்கு எந்தவித பங்கமும் வரக்கூடாது என்று அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கின்றனர்.' என்று பேசியுள்ளார்.

Sasikala in Koovathur

சொத்துக்குவிப்பு வழக்கு பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது,  'வழக்கில் தீர்ப்பு வரட்டும், பார்க்கலாம். தீர்ப்பு வருவதற்கு முன்பே அதைப் பற்றி ஏன் பேச வேண்டும்' என்று பதிலளித்தார்.

மேலும் ’எத்தனை எம்.எல்.ஏ.க்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்?' என்ற நிருபரின் கேள்விக்கு ’எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள் வேண்டும் என்றால்’ என்று பதிலளித்தார். ’ஆட்சி அமையாது என்ற செய்தி தவறானது என ஆளுநர் மாளிகையே செய்தி வெளியிட்டு  இருக்கிறது. வெளியில் உள்ளவர்கள் திட்டமிட்டு தவறான கருத்தைப் பரப்புகின்றனர்.' என்று கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க