வேலூரில் தொழிலதிபர் ஜி.ஜி.ரவி படுகொலை!! | Vellore G.G.Ravi murdered

வெளியிடப்பட்ட நேரம்: 22:01 (12/02/2017)

கடைசி தொடர்பு:11:07 (13/02/2017)

வேலூரில் தொழிலதிபர் ஜி.ஜி.ரவி படுகொலை!!

g.g.ravi

வேலூரில் பிரபல தொழிலதிபர் ஜி.ஜி.ரவி படுகொலை செய்யப்பட்டார். வேலூர் ரங்காலயா திருமண மண்டபம் அருகே காரில் இருந்து இறங்கிய அவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பிரபல ரவுடி மகா கொலை வழக்கில் இவருக்கும் இவரது மகன்களுக்கும் தொடர்பு இருந்தது. இந்நிலையில், மகா கொல்லப்பட்ட சமயத்தில் அவரது ஆதரவாளர்களால் ரவி உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தது. இந்நிலையில், சத்துவாச்சாரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாண்டியைத் தாக்கியதாக 2016-ல் ஜி.ஜி.ரவியை கட்சியைவிட்டு நீக்கியிருந்தார் ஜெயலலிதா. ரவி படுகொலை வேலூரில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க