தலைமைச் செயலகத்துக்குச் செல்கிறார் முதல்வர் பன்னீர்செல்வம்

O.Panneerselvam

இன்று தலைமைச் செயலகம் செல்ல இருப்பதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். இதையடுத்து, ஓ.பி.எஸ் தலைமைச் செயலகம் செல்லும் வழியெங்கும் அவருக்கு ஆதரவான கட்சித் தொண்டர்கள் ஆரத்தி எடுத்து வழியனுப்ப உள்ளதாகத் தகவல் வந்துள்ளது. வழியில் ஓ.பி.எஸ் வழக்கமாகக் கும்பிடும் கோயிலில் மரியாதை அளித்துவிட்டுச் செல்ல உள்ளாராம்.

ஒரு வாரத்துக்குப் பிறகு பன்னீர்செல்வம் இன்றுதான் தலைமைச் செயலகம் செல்கிறார். தலைமைச் செயலகத்தில் அரசுத் துறைத் செயலர்களைச் சந்தித்து அவர், ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!