வெளியிடப்பட்ட நேரம்: 10:44 (13/02/2017)

கடைசி தொடர்பு:12:59 (13/02/2017)

முதல்வர் அறிவிப்பு எதிரொலி! டி.ஜி.பி.யுடன் கிரிஜா வைத்தியநாதன் முக்கிய ஆலோசனை!

தலைமைச் செயலகத்துக்கு முதல்வர் பன்னீர்செல்வம் வருவதையொட்டி டிஜிபி, சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோருடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா- முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு இடையே கடும் அதிகாரப்போட்டி நிலவி வருகிறது. கடந்த ஆறு நாட்களாக அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள், காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்தூரில் உள்ள கோல்டன்பே ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் சசிகலா, இரண்டு நாள்களாக ஆலோசனையில் ஈடுபட்டார். இதனிடையே, தனது இல்லத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பன்னீர்செல்வம், நாளை (இன்று) தலைமைச் செயலகத்துக்குச் செல்கிறேன் என்று கூறினார்.

தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், முதல்வரின் தலைமைச் செயலகம் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், தமிழக காவல்துறை டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோருடன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்த ஆலோசனையில், முதல்வரின் வருகை மற்றும் தமிழக சட்டம்-ஒழுங்கு பிரச்னை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க