கருணாநிதி வீட்டில் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர்! 

கருணாநிதி வீட்டில் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தியம்மாள் வீடு சிஐடி காலனியில் உள்ளது. இந்த வீட்டுக்குள் நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் புகுந்துள்ளார். அவரது கையில் துப்பாக்கி இருந்துள்ளது. இன்று மர்ம நபரை வீட்டில் உள்ளவர்கள் பார்த்தவுடன் துப்பாக்கிக் காட்டி அவர்களை மிரட்டி உள்ளார். இதையடுத்து, அந்த நபரை மடக்கிப் பிடித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். போலீசார் விசாரணையில், அந்த நபர் திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திர பிரசாத் என்றும், அவர் கையில் வைத்திருந்தது பொம்மை துப்பாக்கி என்பதும் தெரியவந்தது.

திருடுவதற்காக, நேற்று இரவே அந்த வீட்டுக்குள் நுழைந்த ராஜேந்திர பிரசாந்த், இன்று மாலை 4 மணி வரை வீட்டுக்குள்ளேயே பதுங்கி உள்ளார். இதனையடுத்து இன்று பிற்பகலுக்கு மேல், வீட்டில் ஆட்களின் நடமாட்டம் குறைவாக இருப்பதை உணர்ந்த அவர், துப்பாக்கி முனையில் அங்குப் பணியாற்றும் பெண்களை மிரட்டி உள்ளார். இந்தச் சமயத்தில் அந்த வீட்டில், கனிமொழி எம்.பி. இல்லை. அவரது தாயார் ராஜாத்தியம்மாள் மட்டும் இருந்துள்ளார். இதனையடுத்து, வீட்டில் உள்ளவர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டு, துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய ராஜேந்திர பிரசாத்தை மடக்கிப் பிடித்து, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனிடையே, தாம் திருடச் சென்றது கருணாநிதியின் வீடு என்பது, தனக்குத் தெரியாது என்று போலீசாரிடம் அவர் வாக்கு மூலம் அளித்துள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!