முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு நடிகர் லாரன்ஸ் நேரில் ஆதரவு!

lawrence

கிரீன்வேஸ் சாலை வீட்டில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார் நடிகர் லாரன்ஸ். 'ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி பெற்றுத்தந்தவர் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்' என லாரன்ஸ் பேட்டியளித்துள்ளார். தமிழகம் முழுவதும் பரவிய ஜல்லிக்கட்டு போராட்ட நேரத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரியிருந்தார் லாரன்ஸ். முன்னர், நடிகர்கள் தியாகு, ராமராஜன், மனோபாலா ஆகியோர் ஓ.பி.எஸ் வீட்டிற்கு வருகை தந்து தங்களது ஆதரவுகளை தெரிவித்தனர்.

படம்: நன்றி ANI

Do you like the story?

Please Appreciate the Author by clapping!