மேற்கு வங்கம்,பெண்மீது ஆசிட் வீச்சு

மேற்கு வங்காளம், பாரிபூரைச்சேர்ந்த 23 வயது இளம்பெண்மணி ரயிலில் செல்கையில், அவர் மீது மர்மநபர் ஆசிட் வீசிய சம்பவம், அம்மாநிலத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஞாயிறன்று இரவு 10.30 மணிக்கு,புறநகர் ரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்த இளம்பெண்மணி மீது, ஆசிட் வீசினார் மர்ம நபர். அவரைப்  பிடிக்க பொதுமக்கள் முயன்றபோது, ரயிலில் இருந்து குதித்து தப்பினார். இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் ரியல் எஸ்டேட் நபர் ஒருவர் மீது சந்தேகம் தெரிவித்துள்ளார், அப்பெண்ணின் தந்தை. ஆண்டுகள் மாறினாலும், பெண்கள் மீதான அடக்குமுறை மாறவில்லை என்பது வருத்தத்துக்கு உரிய செயலே. 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!