எம்.எல்.ஏ-வின் உறவினர் மரணத்துக்குக்கூட நோ லீவ்..! இது சசிகலாவின் கெடுபிடி..!

திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளரும், செய்யாறு தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ-வுமான துசி.கே.மோகன் அவர்களின் மாமா குப்புசாமி, நேற்று காலை இயற்கை எய்தினார். அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க மருமகனான மோகனுக்கு தகவல் அனுப்ப வீட்டில் உள்ளவர்கள் முயன்றனர். ஆனால், அ.தி.மு.க., எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் தங்கவைக்கப்பட்டிருக்கும் 'கோல்டன் பே' ரிசார்ட்டில் ஜாமர்கள் பொருத்தப்பட்டிருப்பதால்,எம்.எல்.ஏ., மோகனைத் தொடர்புகொள்வதில் குடும்பத்தினருக்கு சிக்கல் இருந்தது.

 

பின், ஒருவழியாக தகவல் அனுப்பப்பட்டு, மதியம் 3 மணியளவில் அங்கு இருப்பதுபோல சொந்த ஊருக்குப்போனார், எம்.எல்.ஏ., மோகன். அங்கு அவருக்கு 40 நிமிடங்களுக்குமேல் இறுதிமரியாதை செலுத்த அனுமதி தரவில்லை சசிகலா தரப்பினர். இதனால் செம அப்செட்டில் இருக்கிறார்கள். எம்.எல்.ஏ. மோகனும், அவரது உறவுக்காரர்களும்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!