ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் எடப்பாடி பழனிச்சாமி #OPSvsSasikala #LiveUpdates

ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் எடப்பாடி பழனிச்சாமி

edapaadi palanisamy

ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சந்தித்து பேசிய அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கியதோடு, ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

அதிமுகவின் சட்டமன்ற கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க இருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 12 பேரை நேரில் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். இன்று மாலை 5.30 மணிக்கு ராஜ் பவனில் இந்த சந்திப்பு நடக்கிறது. அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளும் பழனிச்சாமியுடன் ஆளுநர் மாளிகைக்கு செல்கின்றனர்.

தற்போது, கூவத்தூர் 'கோல்டன் பே' ரிசார்ட்டில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி,  செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், டி.டி.வி.தினகரன் உள்பட 12 பேர் சென்னைக்கு புறப்பட்டனர். மாலை 5.30 மணிக்கு ராஜ்பவன் இல்லத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி வந்தார். பின்னர் ஆளுநர் வித்யாசாகர் ராவ் சந்தித்து அவர் பேசினார். அப்போது, அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கிய பழனிச்சாமி, ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

இதைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி வெளியேறினார். இந்த சந்திப்பு 5 நிமிடம் நடந்தது. இதனிடையே, மாலை 6 மணிக்கு முதல்வர் பன்னீர்செல்வம், ஆளுநரை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்கு பின்னர் யாரை ஆட்சியமைக்க அழைப்பது என்று ஆளுநர் முடிவு செய்வார் என தெரிகிறது.

சட்டம்-ஒழுங்கு: ஆளுநரிடம் விளக்கமளித்தார் முதல்வர்

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கூவத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

O. Panneerselvam

இந்நிலையில், தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவிடம், தொலைபேசி மூலம் முதல்வர் பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார்.  அப்போது சட்டம்-ஒழுங்குக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விளக்கம் அளித்தார்.

ஓராண்டுக்கு முன் தீர்ப்பு வந்திருக்கக்கூடாதா? அன்புமணி வருத்தம்

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு சற்று முன்கூட்டியே வந்திருக்கக்கூடாதா என வருத்தம் தெரிவித்துள்ள பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, ஓராண்டுக்கு முன் இந்தத் தீர்ப்பு வந்திருந்தால் தமிழகத்தின் இன்று ஓர் ஊழல் ஆட்சி அமைந்திருக்காது என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருவாய்க்கு மீறிய வகையில் ரூ.66.65 கோடி சொத்துக்குவித்த வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வரும் குற்றவாளிகள் தான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஜெயலலிதா இறந்து விட்டதால் அவருடைய தண்டனை மட்டும் நிறைவேற்றப்படாது. ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும். தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக ஊழல் உருவெடுத்துள்ளது. இதுபோன்ற ஒரு தீர்ப்பின் மூலம் தான் தமிழகத்தில் ஊழலையும், ஊழல்வாதிகளையும் அகற்ற முடியும் என்று நான் நீண்டகாலமாக கூறி வருகிறேன். அந்த வகையில் இந்தத் தீர்ப்பு சற்று முன்கூட்டியே வந்திருக்கக்கூடாதா என்ற வருத்தம் மட்டுமே எனக்கு உள்ளது. ஓராண்டுக்கு முன் இந்தத் தீர்ப்பு வந்திருந்தால் தமிழகத்தில் இன்று ஓர் ஊழல் ஆட்சி அமைந்திருக்காது. தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழலே வேறுபட்டதாக இருந்திருக்கும்.

அதிமுக தனிநபர் சார்ந்த கட்சி என்பதால் இத்தீர்ப்பு வெளியான பிறகு அக்கட்சி கரைந்து போயிருக்கும். அதனால் ஊழல் நிர்வாகம் மற்றும் அரசியல் நெருக்கடிகளில் இருந்தும் தமிழகம் தப்பித்திருக்கும். தாமதமாக வந்தால் கூட பொதுவாழ்வில் ஊழலை ஒழிப்பதற்கான சிறந்த ஆயுதமாக உருவெடுத்துள்ள இத்தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டியதாகும். நாட்டில் ஊழல் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் மிகச்சிறந்த பாடமாக இந்தத் தீர்ப்பு அமையும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. இப்படி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை பெற்றுத்தந்த கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவுக்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வழக்கிலிருந்து அவரை விரட்ட பல முயற்சிகள் நடந்தன. அவரையே ஊழல்வாதி என்று முத்திரை குத்தவும், அவரது நடத்தையை கொலை செய்யவும் முயற்சிகள் நடந்தன. ஆனாலும், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தப் போராடி இத்தீர்ப்பை அவர் பெற்றுத் தந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழகத்தின் இப்போது மிகவும் மோசமான சூழல் நிலவுகிறது. விவசாயிகள் வறுமை மற்றும் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்கின்றனர்; ஊழல் தலைவிரித்தாடுகிறது; மது வெள்ளமாக ஓடுகிறது; தமிழக அரசின் கடன் தொல்லை தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்து விட்டது; சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. இவற்றையெல்லாம் சரி செய்யவும், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவும் தமிழக ஆளுநர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்துக்கு நிரந்தர ஆளுநர் நியமிக்கப்படாத நிலையில், தமிழக அரசு நிர்வாகத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவ் கண்காணிக்க வேண்டியது அவசியம். தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைப்பது யார் என்பது தொடர்பாக குழப்பங்கள் ஏற்பட்டிருக்கும் நிலையில், தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களில் யாருக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்பதை ஜனநாயக மரபுகளின் அடிப்படையில் ஆளுநர் உறுதி செய்ய வேண்டும். குதிரை பேரம் நடப்பதைத் தடுக்கும் வகையில் அனைத்து உறுப்பினர்களையும் அழைத்துப் பேசி அவர்களின் நிலைப்பாட்டை அறிந்து, தகுதியானவர்களை தமிழகத்தில் புதிய அரசு அமைக்க வருமாறு அழைப்பு விடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளார்.
 

ஆளுநர் அழைப்பு! கூவத்தூரிலிருந்து விரைந்தார் எடப்பாடி பழனிச்சாமி

edapaadi palanisamy

அதிமுகவின் சட்டமன்ற கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க இருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 12 பேரை நேரில் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். இன்று மாலை 5.30 மணிக்கு ராஜ் பவனில் இந்த சந்திப்பு நடக்கிறது. அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளும் பழனிச்சாமியுடன் ஆளுநர் மாளிகைக்கு செல்கின்றனர்.

தற்போது, கூவத்தூர் 'கோல்டன் பே' ரிசார்ட்டில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி உட்பட அமைச்சர்களும், முக்கிய நிர்வாகிகளும் சென்னைக்கு புறப்பட்டுள்ளனர்.

அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு!

Edapaadi Palanisamy selected

அ.தி.மு.க-வின் சட்டமன்ற கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூவத்தூரில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வரவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது. 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பழனிச்சாமி,’சசிகலா தலைமையில் கூவத்தூர் ரிசார்ட்டில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக என்னைத் தேர்வு செய்தனர். பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் எனது பெயரை முன்மொழிந்தார். ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்க வேண்டும். அழைப்புக்காகக் காத்திருக்கிறோம்’ என்றார்.
 

O Paneerselvam speech

'நல்லாட்சி தொடரும்' - முதல்வர் பன்னீர்செல்வம்

சசிகலாவுக்கு தண்டனை உறுதியான நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஓ.பன்னீர்செல்வம்,’ஜெயலலிதாவின் ஆன்மா உயிரோடுதான் இருக்கிறது. ஜெயலலிதாவின் நல்லாட்சிதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையுடன் இந்த நல்லாட்சி தொடரும். எனக்கு ஆதரவளித்து வரும் அனைவருக்கும் நன்றி. எந்தக் கட்சியின் ஆதரவும் இன்றி, அதிமுக உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சி தொடரும்’ என்று நம்பிக்கை தெரிவித்தார். 

 

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். கட்சிக்குக் களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்டதாக கட்சியில் இருந்து பன்னீர்செல்வத்தை நீக்கியுள்ளாராம் சசிகலா.

Sasikala-expels-Panneerselvam-from-admk

 

அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து பன்னீர்செல்வம் நீக்கம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். கட்சிக்குக் களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்டதாக கட்சியில் இருந்து பன்னீர்செல்வத்தை நீக்கியுள்ளாராம் சசிகலா.

Sasikala-expels-Panneerselvam-from-admk

 

சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு! பன்னீர்செல்வம் முக்கிய அறிக்கை

O Panneerselvam report after Sasikala Verdict

சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் சசிகலாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அமைச்சர்கள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதல்வர் பன்னீர்செல்வம் முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனது அன்புக்குரிய கழக அமைச்சர்களே, கழக சட்டமன்ற உறுப்பினர்களே உங்கள் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள், கடந்த 07.02.2017 அன்றிரவு, உங்கள் அன்பு சகோதரன் ஆகிய நான், ஜெயலலிதா நினைவகத்தில் பிரார்த்தனை செய்துவிட்டு, பின்னர் ஜெயலலிதாவின் ஆன்மா எனக்கு அளித்த மானசீக உத்தரவின் பேரில், எனது மனதில் அடக்கி வைத்திருந்த சில உண்மைகளை செய்தியாளர்கள் மூலம் தங்களுக்கும், நாட்டு மக்களுக்கும் தெரிவித்தேன். இதனைத் தொடர்ந்து எனது நிலைப்பாட்டிற்கு மாநிலம் முழுவதும் கட்சி வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, எம்ஜிஆரால் துவக்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டிக்காத்து, வளர்க்கப்பட்டு வந்த நமது மாபெரும் அஇஅதிமுக இயக்கத்தைச் சேர்ந்த சுமார் ஒன்றரைக் கோடி உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாக தொடர்ந்து ஏகோபித்த ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஜெயலலிதா மறைந்த அன்று இரவு உங்கள் அனைவராலும் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கனத்த இதயத்துடன் முதலமைச்சராகப் பதவியை ஏற்று, உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடு ஜெயலலிதா வழியில், கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து தரப்பினரும் பாராட்டும் வகையில், ஜெயலலிதாவின் ஆட்சியை அவர் இல்லை என்ற குறை பொதுமக்களுக்குத் தெரியாதவாறு தொடர்ந்து நடத்தி வந்தோம். ஜெயலலிதா ஆட்சியை அனைத்து தரப்பினரும் பாராட்டி வந்தனர். நாம் யாரும் எதிர்பாராத வகையில் நடந்த ஒரு சில நிகழ்வுகளால் கடந்த சில நாட்களாக ஜெயலலிதாவின் ஆட்சி மீதமுள்ள ஆண்டுகளுக்குத் தொடர்வதில் தற்காலிக இடையூறு மட்டுமே ஏற்பட்டுள்ளது. எனவே, தற்காலிகமாக ஏற்பட்டுள்ள இடையூறை நீக்கி, நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து கழகத்துக்கு எவ்வித ஊறும் ஏற்படாமல் காத்து ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர தேவையானவற்றை நம் மனசாட்சிப்படி உடனடியாக மேற்கொள்ள வேண்டியது நமது அனைவரின் கடமையாகும். இதுவே மானசீகமாக ஜெயலலிதாவுக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாகும்.

காலத்தின் சதியினால் ஜெயலலிதா நம்மிடையே இருந்து தொடர்ந்து பணியாற்ற இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர வேண்டுமென்ற காரணத்தினாலேயே நமக்கு வாக்களித்து நம்மை வெற்றி பெறச் செய்தனர். தற்போது ஜெயலலிதா நம்மிடையே இல்லாத சூழ்நிலையில், பொதுமக்கள், குறிப்பாக கழக வெற்றிக்காக அல்லும், பகலும் கண் அயராது உழைத்த நமது கழகக் கண்மணிகள் அனைவரும் எதை விரும்புகின்றனர் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அவர்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து, அவர்கள் காட்டும் வழியிலேயே செல்வதுதான் சட்டமன்ற உறுப்பினர்களாகிய நமது அனைவரின் கடமையாகும். இதுவே நமது மாநிலத்திற்கும் நலம் சேர்க்கும். ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர அவர்கள் அனைவரது ஆதரவும் நமக்கு இன்றியமையாததாகும்.

எனவே, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போதுள்ள ஒட்டுமொத்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எந்தவிதமான முடிவு எடுத்தால், அது கழக ஒற்றுமைக்கும், ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர்வதற்கும், மாநிலத்திற்கும் நன்மை அளிக்கும் என்பதை உணர்ந்து அதற்கேற்றவாறு நல்ல முடிவு எடுத்து செயல்பட வேண்டும் என்று உங்கள் அனைவரையும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும், தற்காலிகமாக நமக்கிடையே ஏற்பட்ட சில கசப்பான நிகழ்வுகளை மறந்து நாம் அனைவரும் எப்போதும் போல ஒற்றுமையுடன் இருந்து அவரவருக்குரிய முக்கியத்துவத்துடன் தொடர்ந்து செயல்படுவதில் எவ்வித தயக்கமும் இருக்காது என்பதை நான் இத்தருணத்தில் உங்கள் அனைவருக்கும் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், நம் எதிரிகள், நாம் பிளவுபடுவதை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். அதற்கு நாம் இடமளிக்கக் கூடாது. அவ்வாறு இடமளிப்பவர்களை ஜெயலலிதாவின் ஆன்மா என்றும் மன்னிக்காது. ஜெயலலிதா தங்கள் வாழ் நாள் முழுவதும் எக்கொள்கைக்காக வாழ்ந்தார்களோ, அதைத் தொடர்ந்து கடைப்பிடித்து, அவர் விட்டுச் சென்ற பணிகளை நாம் ஒற்றுமையுடன் தொடர்ந்து மக்களுக்கு ஆற்றிட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன். ஜெயலலிதாவின் புகழையும், எம்.ஜி.ஆரின் புகழையும் என்றென்றும் அழியாது காத்து மேன்மேலும் ஓங்கச் செய்திட கழகக் கண்மணிகளும் பொதுமக்களும் முழுமையாக ஒத்துழைப்பு நல்கிட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

கூவத்தூர் செல்கிறார் முதல்வர் பன்னீர்! பரபரப்பில் ரிசார்ட்

O.Panneerselvam goes to Kuvathur

கோல்டன் பே ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களை சந்திக்க முதல்வர் பன்னீர்செல்வம் கூவத்தூர் செல்கிறார்.

சற்று நேரத்துக்கு முன்பு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்,  'ஜெயலலிதாவின் ஆன்மா உயிரோடுதான் இருக்கிறது. ஜெயலலிதாவின் நல்லாட்சி தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையுடன் இந்த நல்லாட்சி தொடரும். எனக்கு ஆதரவளித்து வரும் அனைவருக்கும் நன்றி’ என்று பேசினார். இதனையடுத்து தற்போது முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூவத்தூரில் இருக்கும் கோல்டன் பே ரிசார்ட்டில் தங்கியுள்ள சட்டமன்ற உறுப்பினர்களை சந்திக்கச் செல்கிறார். 

கூவத்தூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிவிரைவுப்படையினர் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர். அங்குதான் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவும்  இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பெங்களூரு நீதிமன்ற அறை எண் 48-ல் சசிகலா ஆஜராக வேண்டும்..!

sasikala

சொத்துக் குவிப்பு மேல்முறையீடு வழக்கில் வி.கே.சசிகலா உட்பட மூவர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம். இந்நிலையில், பெங்களூரு நீதிமன்றத்தின் அறை எண் 48-ல் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி அசோக் நாராயணன் முன்பு சசிகலா உட்பட மூவர் ஆஜராக வேண்டும் என பெங்களூரு நகர சிவில் நீதிமன்ற பதிவாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

’மேல்முறையீடு செய்வோம்’: தம்பிதுரை

தம்பிதுரை

சொத்துக்குவிப்பு வழக்கின் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக அதிமுக துணை சபாநாயகர் தம்பிதுரை டெல்லியில் பேட்டி அளித்துள்ளார்.  டெல்லியில் பேட்டியளித்த தம்பிதுரை, ’சசிகலா வழக்கில் வெளியான உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். ஆட்சி அமைக்க ஆளுநர் விரைவில் அழைப்பார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார். அவரால் முதல்வராக முடியாது’ என்றார்

'யாருக்கும் ஆதரவு கிடையாது'- திமுக திட்டவட்டம்!

Anbalagan

சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை உறுதி செய்து தீர்ப்பளித்தது. இதையடுத்து, தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன், இந்தத் தீர்ப்பைப் பற்றி தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

'உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போதைக்கு ஆட்சியமைக்கும் எண்ணம் தி.மு.க.வுக்கு இல்லை. தமிழகத்தில் ஆட்சியமைக்க தி.மு.க யாருக்கும் ஆதரவு அளிக்காது' என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அன்பழகன் தெரிவித்துள்ளார். 

’பொன்னாள் இது’ : சசிகலா தீர்ப்பு குறித்து எஸ்.வி.சேகர் கருத்து

சசிகலா தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள எஸ்.வி.சேகர், ’தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...மீண்டும் தர்மமே வெல்லும் என்ற வார்த்தை தமிழகத்தில் நாம் அடிக்கடி கேட்டுக்கேட்டுப் புளித்துப்போன வார்த்தை. உண்மையில் அந்த சூதைத் தாண்டி தர்மம் வென்றிருக்கிறது இன்று. காரணம் அரசியலில் சொத்துக்குவிப்பவர்களையே பலநாட்களாக பார்த்துப் பார்த்துப் பழகிவிட்ட இளைஞர்கள் மத்தியில் நேர்மையானவர்கள் என்பவர்கள் இளிச்சவாயர்கள் போல அவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.

சசிகலா தீர்ப்புப் பற்றி எஸ்.வி.சேகர்


நேர்மையான தன் முந்தையை தலைமுறையைப் பார்த்து நேர்மையா இருந்து என்ன சாதிச்ச...என கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டனர். அந்த தலைமுறையினருக்கு நேர்மையின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக வெளிவந்திருக்கிறது இந்தத் தீர்ப்பு. மக்களுக்கு தொண்டு செய்யப் பதவிக்கு வந்தவர்கள் மக்கள் முதுகிலேயே ஏறி கொள்ளையடிப்பது தவறு என நிரூபிக்கப்பட்ட பொன்னாள் இது.

இம்மாதிரி தீர்ப்புகள் இனி அந்த இருக்கையில் அமர்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். எத்தனை நாள்தான் நேர்மைக்கு உதாரணமாக கக்கன், காமராஜர் என சொல்லிக்கொண்டிருப்பது இனி எதிர்காலத்தில் அம்மாதிரி தலைவர்கள் உருவாகவேண்டும். இனியாவது கட்சிகளையோ, மதங்களையோ பார்க்காமல், தவறான ஆட்களைத் தேர்ந்தெடுக்காமல் நேர்மையானவர்களை நமக்கு சேவை செய்யத் தேர்ந்தெடுப்போம்' என்றார்.

'துரோகம் செய்தவர்களுக்கு சிறை' - தீர்ப்பு குறித்து தீபா கருத்து

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், 'நீண்ட நாட்கள் கழித்து நல்ல தீர்ப்பு வந்துள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். சிறைக்குச் செல்ல வேண்டியவர்கள் சென்றிருக்கிறார்கள்.

Deepa

ஜெயலலிதா எப்போதுமே, இவர்களுக்கு பதவி அளிக்கவில்லை. முக்கியமாக அவர்களை ஜெயலலிதா எப்போதும் விரும்பியதும் இல்லை. தொடர்ந்து 30 ஆண்டுகள், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்து கொண்டிருந்தவர்கள் சிறைக்குச் செல்ல உள்ளனர்.

சசிகலா குடும்பத்துக்கு யார் தேவையோ, அவர்களுக்கு பதவி அளிக்கின்றனர். எனக்கு அழைப்பு விடுத்த முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு நன்றி. எங்களது முடிவு குறித்து, விரைவில் அறிவிப்போம்' என்றார்.

பன்னீருக்கு ஆதரவளித்த பொன்னையன் உள்பட 19 பேர் நீக்கம்! 12 எம்.பி.க்கள் நீக்கமில்லை!

முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்த பொன்னையன் உள்பட 19 பேரை அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கியுள்ளார் சசிகலா. அதே நேரத்தில் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவளித்த 12 எம்.பி.க்களை அவர் நீக்கவில்லை.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கினார். தனி அணியாக பிரிந்த பன்னீர் செல்வத்துக்கு, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள், இன்னாள் நிர்வாகிகள் பலர் ஆதரவு தெரிவித்தனர். இதனிடையே, சொத்துக்குவிப்பு மேல்முறையீடு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா வழங்கிய தீர்ப்பை இன்று உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த தீர்ப்பால் சசிகலா பத்து ஆண்டுகள் தேர்தலில் நிற்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வத்தை இன்று கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நீக்கியுள்ளார். மேலும், பொன்னையன் உள்ளிட்ட 19 பேரை கட்சியில் இருந்து நீக்கியுள்ள சசிகலா, பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்த 12 எம்.பி.க்களை அவர் கட்சியில் இருந்து நீக்கவில்லை.
 

பொதுத்தேர்தல்தான் ஒரே தீர்வு! திருமாவளவன்

ஜெயலலிதா குற்றமற்றவர் அல்ல என்பதையே இத்தீர்ப்பு உணர்த்துகிறது என்று கூறியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தற்போது பொதுத்தேர்தல் தான் தீர்வு என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தின் "இரு நீதியரசர் இருக்கை" அளித்துள்ளத் தீர்ப்பு, தமிழகத்தில் மட்டுமின்றி இந்திய அளவில் ஊழல் சக்திகளுக்குப் பாடம்புகட்டும் வகையில் ஒரு பேரிடியாக அமைந்துள்ளது. இதனை விடுதலைச்சிறுத்தைகள் வரவேற்கிறது.

எனினும், இந்தத் தீர்ப்பு மிகவும் காலங்கடந்து அளிக்கப்படுவதால், தமிழகத்தில் பல்வேறு வகையிலான குழப்பங்களும் நெருக்கடிகளும் ஏற்பட்டுள்ளன என்பதை இச்சூழலில் விடுதலைச்சிறுத்தைகள் சுட்டிக்காட்டுகிறது. அத்துடன், ஜெயலலிதா காலமானதால் அவர் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அதாவது, அவர் குற்றமற்றவரென்று இத்தீர்ப்பு கூறவில்லை. எனவே, அவருக்கென வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக அரசு மேலும் தொடர்வது, ஜனநாயகத்துக்குப் பாதுகாப்பானதாக அமையாது. இந்நிலையில், அடுத்து பொதுத்தேர்தலை நடத்துவதுதான் தீர்வாக அமையும்" என்று கூறியுள்ளார்.

இன்று தான் உண்மையான தீபாவளி! -தமிழருவி மணியன்

சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட நாள் தான், தமிழக மக்களுக்கு உண்மையான தீபாவளித் திருநாள் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உச்ச நீதிமன்றம் ஊழலுக்கு எதிராக வரலாற்றுச் சிறப்பு மிக்க நரகாசுர வதத்தை நடத்தி முடித்திருக்கிறது. தமிழக மக்கள் அனைவருக்கும் தீர்ப்பு வழங்கப்பட்ட நாள் தான் உண்மையான தீபாவளித் திருநாள். மன்னார்குடி குடும்பத்திடமிருந்து இனி தமிழகம் முற்றாக விடுபட்டுவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. தவறான வழியில் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்திச் சொத்துக் குவிக்கும் ஊழல் அரசியல்வாதிகள் அனைவருக்கும் எதிராக விடுக்கப்பட்டிருக்கும் கடுமையான எச்சரிக்கையாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. 

ஆளுநர் அவசரப்படாமல் பொறுமை காத்ததில் இருந்த நியாயத்தை அவரை விமர்சித்த அரசியல் தலைவர்களும் இப்போது உணர்ந்திருக்கக்கூடும். ஆளுநர் இனிமேல் எந்த குதிரை பேரத்துக்கும் வாய்ப்பளிக்காமல் உடனே பன்னீர் செல்வத்தை அழைத்து முதல்வராகப் பதவி பிரமாணம் செய்வித்துச் சட்டப்பேரவையில் தன்னுடைய பெரும்பான்மை ஆதரவை நிரூபிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். முதல்வர் பொறுப்பேற்கும் பன்னீர் செல்வம், மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப கடந்த காலத் தவறுகளிலிருந்து விடுபட்டு ஊழலின் நிழல் படியாத நிர்வாகத்தை இனியாவது தருவதற்கு உறுதியேற்க வேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளார்.

சசிகலா சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்! ஜி.ராமகிருஷ்ணன்

ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அமைந்துள்ளது என்று கூறியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், ஊழல் செய்து சேர்க்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேர் மீது தொடுக்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கு, 18 ஆண்டுகள் நடந்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, நால்வரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, அவர்களை விடுவித்தார். தற்போது உச்ச நீதிமன்றம், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்து, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையும், ஆணையையும் ரத்து செய்து, சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பையும், ஆணைகளையும் முழுமையாக உறுதிப்படுத்துவதாக தீர்ப்பில் கூறியுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இத்தீர்ப்பை மனமாற வரவேற்கிறது. பொதுவாழ்வில் நேர்மையற்ற நடைமுறை மற்றும் லஞ்ச ஊழலில் ஈடுபடுவோர் அனைவருக்குமான எச்சரிக்கையாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது என்று சுட்டிக்காட்டுவதுடன் ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு இது வலு சேர்க்கும் என்றும் கருதுகிறது. ஊழல் செய்து சேர்க்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.

இச்சூழலில், காலம் தாழ்த்தாமல் ஆளுநர் அடுத்த கட்ட நடவடிக்கைக்குப் போக வேண்டும். அரசியல் ஸ்திரமற்ற தன்மை நீடிப்பதை அனுமதிக்கக் கூடாது. அரசியல் சட்ட நடைமுறையின் படி, சட்டமன்றம் கூட்டப்பட்டு, உரிய முறையில் அரசாங்கம் நிறுவப்படுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சர் மாஃபா வாகனம் தடுத்து நிறுத்தம்; கூவத்தூரில் 144 தடை உத்தரவு!

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து, முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூவத்தூர் நட்சத்திர விடுதியில்  உள்ள அதிமுக எம்.எல்.ஏக்களை சந்திக்கச் சென்றனர். அப்போது, கோவளம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜனின் வாகனத்தை, காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

Police security Kuvathur

இதையடுத்து, அசாதாரண சூழல் நிலவுவதால் கூவத்தூரில் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம். அதன்படி, கல்பாக்கம் முதல் கூவத்தூர் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி கூறியுள்ளார். 

மேலும், கூவத்தூர் வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன.

தீர்ப்பு எதிரொலி! போயஸ் கார்டனில் இருந்து வெளியேறியது போலீஸ்

Poes Garden

சசிகலாவுக்கு தண்டனை உறுதியானதைத் தொடர்ந்து, போயஸ் கார்டனில் போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. தற்போது சசிகலா கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ள

Do you like the story?

Please Appreciate the Author by clapping!