கூவத்தூர் விரைந்தார் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்

Deepak

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தங்கியுள்ள கூவத்தூர் ரிசார்ட்டுக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் சென்றுகொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சசிகலா மற்றும் ஜெயலலிதா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று வர உள்ள நிலையில்  தீபாவின் தம்பி தீபக் சசிகலாவை சந்திக்க உள்ளது ஏன் என்று கேள்வி எழும்பியுள்ளது. 

sasikala, deepak

ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா அண்ணன் மகளான தீபா மீது மரியாதை உள்ளதாகவும், அவருடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். அதற்கு தீபா தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. மேலும், ஜெ., பிறந்த நாளன்று அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்கப்போவதாக தீபா தெரிவித்திருந்தார்.

இந்தக் குழப்பமான சூழலில், தீபாவின் தம்பி தீபக் சசிகலாவை சந்திக்க கூவத்தூர் விரைந்துள்ளது, சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!