’10 ஆண்டுகளுக்கு சசிகலா தேர்தலில் போட்டியிட முடியாது’: பி. வி. ஆச்சார்யா 

BV Acharya

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா  உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சரியானது என்றும் நீதி வென்றுள்ளது என்றும் மூத்த வழக்கறிஞர் பி. வி. ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் குறித்துப் பேசிய ஆச்சார்யா, ’நீதித்துறை சுதந்திரமானது. அரசியல் சார்பற்றது. இன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பால், நீதிபதிகள் நீதியை நிலைநாட்டிவிட்டனர். சசிகலா குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதால் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!