வெளியிடப்பட்ட நேரம்: 15:44 (14/02/2017)

கடைசி தொடர்பு:16:15 (14/02/2017)

தீர்ப்பு எதிரொலி! போயஸ் கார்டனில் இருந்து வெளியேறியது போலீஸ்

Poes Garden

சசிகலாவுக்கு தண்டனை உறுதியானதைத் தொடர்ந்து, போயஸ் கார்டனில் போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. தற்போது சசிகலா கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டனில் நிரந்தரமாக போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுவிட்டது. மேலும் போயஸ் கார்டன் இல்லம் வெறிச்சோடி காணப்படுகிறது. மற்றொருபுறம் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டின் முன்பு தொண்டர்கள் உற்சாகமாக இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க