வெளியிடப்பட்ட நேரம்: 15:56 (14/02/2017)

கடைசி தொடர்பு:17:54 (14/02/2017)

ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் எடப்பாடி பழனிச்சாமி

edapaadi palanisamy

ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சந்தித்து பேசிய அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கியதோடு, ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

அதிமுகவின் சட்டமன்ற கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க இருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 12 பேரை நேரில் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். இன்று மாலை 5.30 மணிக்கு ராஜ் பவனில் இந்த சந்திப்பு நடக்கிறது. அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளும் பழனிச்சாமியுடன் ஆளுநர் மாளிகைக்கு செல்கின்றனர்.

தற்போது, கூவத்தூர் 'கோல்டன் பே' ரிசார்ட்டில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி,  செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், டி.டி.வி.தினகரன் உள்பட 12 பேர் சென்னைக்கு புறப்பட்டனர். மாலை 5.30 மணிக்கு ராஜ்பவன் இல்லத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி வந்தார். பின்னர் ஆளுநர் வித்யாசாகர் ராவ் சந்தித்து அவர் பேசினார். அப்போது, அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கிய பழனிச்சாமி, ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

இதைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி வெளியேறினார். இந்த சந்திப்பு 5 நிமிடம் நடந்தது. இதனிடையே, மாலை 6 மணிக்கு முதல்வர் பன்னீர்செல்வம், ஆளுநரை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்கு பின்னர் யாரை ஆட்சியமைக்க அழைப்பது என்று ஆளுநர் முடிவு செய்வார் என தெரிகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க