வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (15/02/2017)

கடைசி தொடர்பு:16:14 (15/02/2017)

சசிகலா தீர்ப்பில் இவைதான் முக்கியமான 10 விஷயங்கள்! #DACase

சொத்துக் குவிப்பு வழக்கு - ஜெயலலிதா சசிகலா

நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பைக் கண்டு நீதியின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் விக்கித்து நின்றார்கள். நீதி முட்டுச் சந்தில் மோதி வழிதெரியாமல் மூச்சடைக்க நிற்கிறது என்றார்கள். ஆனால், உச்சநீதிமன்றம் இந்த நினைப்பை பொய்யாக்கி, வரலாற்றில் முக்கிய இடம் பிடிக்க கூடிய தீர்ப்பை வழங்கி இருக்கிறது. தவறு செய்தவர்கள் சிறை செல்கிறார்கள். 

சரி... அப்படி என்னதான் இருக்கிறது தீர்ப்பில்...?

ஜெயலலிதா - சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த நீதிபதிகள்  தனது தீர்ப்பில் சூட்டிக்காட்டி உள்ள பத்து விஷயங்கள் இதோ,

*பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை வரிக்குவரி ஏற்கிறோம்.

*சம்பாதிப்பதற்காகவே ஜெயலலிதா வீட்டில் சதித்திட்டம் போட்டார்கள்.

*ஒரு வங்கிக் கணக்கில் இருந்து இன்னொரு வங்கிக் கணக்குக்கு பணத்தை இவர்கள் மாற்றியதிலிருந்தே இந்தச் சதித்திட்டம் வெளிப்படுகிறது. 

*எங்களது கணக்கீட்டின்படி 211 சதவிகிதம், இவர்கள் கூடுதலாகச் சம்பாதித்து உள்ளார்கள். 

*எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் இல்லாமல் மிகத் திறமையாகத் திட்டமிட்டு சொத்துக்களை இவர்கள் வாங்கிக் குவித்துள்ளார்கள். 

*ஒரு ஆக்டோபஸ் மாதிரி, அத்தனை திசையிலும் அவர்கள் தங்களது ஊழலை நடத்தியுள்ளார்கள். 

*பணம்... பணம்... பணம் என்று பணத்தைக் குறியாகவைத்தே குற்றம்சாட்டப்பட்டவர்கள் வேலைகளைச் செய்துள்ளார்கள். 

*சொத்துக்களை எப்படியெல்லாம் வாங்கிக் குவிக்க வேண்டும் என்ற பேராசையுடன் நடந்துள்ளார்கள். 

*பொதுமக்களுக்கும் நமது அரசியலமைப்புச் சட்டத்துக்கும் செய்யும் நம்பிக்கைத் துரோகம் இது. 

*ஊழல் சக்திகள் நாட்டில் அதிகம். ஆனால், நியாய தர்மத்துக்குப் பயந்து நடப்பவர்கள் சிறுபான்மையினர் 

தீர்ப்பு 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்