வெளியிடப்பட்ட நேரம்: 21:58 (14/02/2017)

கடைசி தொடர்பு:09:20 (15/02/2017)

'நானும், முதல்வரும் அதிமுகவின் இரு கரங்களாக செயல்படுவோம்'- தீபா

முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, திடீரென்று மெரினாவில் சந்தித்தனர். இதையடுத்து அவர்கள் கூட்டாக ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

Deepa

இந்நிலையில், பன்னீர்செல்வத்துடனான சந்திப்புக்குப் பின் மெரினாவில் தீபா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 'இன்று முதல் எனது அரசியல் பிரவேசம் துவங்குகிறது. நானும், முதல்வர் பன்னீர்செல்வமும் அதிமுகவின் இரு கரங்களாக இணைந்து செயல்படுவோம். அவரும் நியாயமான விஷயத்துக்காக குரல் கொடுக்கிறார்' என்று கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க