கூவத்தூர் ரிசார்ட்டிலிருந்து சசிகலா புறப்பட்டார்!

கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் தங்கியிருந்த சசிகலா சற்றுமுன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

தமிழகத்தில் நிலவும் அசாதாரணமான சூழல் காரணமாக, சசிகலாவை ஆதரிக்கும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூவத்தூர் ரிசார்ட்டில் கடந்த சில நாட்களாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று சென்னை போயஸ் கார்டனில் இருந்து கூவத்தூர் ரிசார்ட்டுக்கு வந்த அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களுடன் தங்கினார். 

 

 

 

இந்நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கில், 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தது. மேலும், சசிகலா பெங்களூரு நீதிமன்றத்தில் உடனே ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத்தோடர்ந்து, தனது உடல் நிலையை காரணம் காட்டி, நான்கு வார காலம் அவகாசம் கேட்டிருந்தார். இதற்கு நீதிமன்றம் எந்த பதிலும் கூறாத நிலையில், கூவத்தூரில் உள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து தற்போது வரை, கூவத்தூரில் தங்கியிருந்த அவர், சற்று முன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

- ரா.வளன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!