வெளியிடப்பட்ட நேரம்: 22:40 (14/02/2017)

கடைசி தொடர்பு:15:39 (15/02/2017)

'எனக்கு வந்துள்ளது தற்காலிக பிரச்னைதான்' - சசிகலா

கூவத்தூரில் இருந்து புறப்படுவதற்கு முன் சசிகலா எம்.எல்.ஏக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், ' இந்த வழக்கு திமுகவால் தொடரப்பட்டுள்ளது. எனக்கு வந்துள்ளது தற்காலிக பிரச்னைதான். அதை என்னால் சமாளிக்க முடியும். சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு நமக்கு உள்ளது. எம்.எல்.ஏக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.

Sasikala

சட்டமன்ற கட்சித் தலைவரை தேர்ந்தெடுத்த பிறகும், ஆளுநர் ஏன் இன்னும் அழைப்பு விடுக்காமல் இருக்கிறார்?. எந்த சக்தியாலும் அதிமுகவை அழிக்க முடியாது. நான் எப்போதும் கட்சியை குறித்துதான் சிந்தித்து வருகிறேன். விரைவில் ஆளுநர் அழைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க