அதிமுக-வின் துணை பொதுச் செயலாளராக டி.டி.வி தினகரன் நியமனம்! | Is TTV Dinakaran to be next Deputy General Secretary of ADMK?

வெளியிடப்பட்ட நேரம்: 08:42 (15/02/2017)

கடைசி தொடர்பு:14:26 (15/02/2017)

அதிமுக-வின் துணை பொதுச் செயலாளராக டி.டி.வி தினகரன் நியமனம்!

TTV Dinakaran

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. இந்நிலையில், சசிகலாவின் அக்காள் மகன் டி.டி.வி தினகரன் அ.தி.மு.க-வின் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Sasikala wirth dianakaran

நேற்று, அ.தி.மு.க-வின் சட்டமன்றக் கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறிய தீர்ப்பால், அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் சசிகலா அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாது என்ற நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை, சசிகலாவின் அக்கா மகன் டி.டி.வி தினகரன் மற்றும் டாக்டர் எஸ்.வெங்கடேஷ் ஆகியோர் மீண்டும் அ.தி.மு.க-வில் சேர்க்கப்பட்டுள்ளதாக 'நமது எம்ஜிஆர்' நாளிதழில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

'டி.டி.வி. தினகரன் மற்றும் டாக்டர் எஸ்.வெங்கடேஷ் ஆகியோர் தங்களது செயலுக்கு வருந்தி நேரிலும் கடிதம் மூலமும் மன்னிப்புக் கோரி, தங்களை  மீண்டும் கழகத்தில் இணைத்துக் கொள்ள வேண்டி கேட்டுக் கொண்டதால், இன்று முதல் உறுப்பினர்களாகக் கழகத்தில் இணைந்து பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள்.' என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க