வெளியிடப்பட்ட நேரம்: 19:31 (15/02/2017)

கடைசி தொடர்பு:19:43 (15/02/2017)

OPSVsEPS : இன்றும் ஆளுநரை சந்திக்கும் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி

O.Paneerselvam, Edappadi Palanisamy

தமிழகத்தில் நிலவும் அசாதாரணமான சூழலில், அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் நேற்று வழங்கி, ஆட்சியமைக்கவும் உரிமை கோரினார். இந்நிலையில், தற்போது வரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காத நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நினைவூட்டல் கடிதம் எழுதினார். 

இதனைத்தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு, அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர்  எடப்பாடி பழனிச்சாமிக்கு, ஆளுநர் நேரம் ஒதுக்கி உள்ளார். இதனால், ஆளுநரைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி, ஜெயக்குமார் உட்பட 10 பேர் கூவத்தூர் ரிசார்ட்டிலிருந்து கிளம்பிச் சென்றுள்ளனர். 

இதனிடையே அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்புக்கு பிறகு, நேற்று போல் இன்றும் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்திக்க ஆளுநர் இன்றும் அனுமதி வழங்கி உள்ளார். இந்த சந்திப்பு இரவு 8.30 மணிக்கு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க