முதல்வராகிறார் எடப்பாடி பழனிச்சாமி!

தமிழகத்தில் ஆட்சியமைக்குமாறு அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து 15 நாட்களுக்குள் சட்டசபையில் வாக்கெடுப்பு நடத்தி, எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் கூறியுள்ளார்.

Edappadi Palanisamy

படம்: ஆ.முத்துக்குமார்

எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஆளுநரை சந்தித்ததை அடுத்து இந்த அறிவிப்பை, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. கடந்த 14-ம் தேதி கொடுத்த எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தின் அடிப்படையில், ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளதாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Rajbhavan press release

இதனால் இன்று மாலை 4 மணிக்கு, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்கிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!