ரிசார்ட்டில் இருந்து புறப்பட்டனர் அதிமுக எம்.எல்.ஏக்கள்

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவின் அறிவிப்பையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை இன்று மாலை ஆட்சி அமைக்கிறது. இதையடுத்து, கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் இருந்து அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் வெளியேறினர்.

Golden Bay resort

கடந்த 9 நாட்களாக அங்கு தங்கியிருந்தவர்கள், தற்போது சென்னைக்குப் புறப்பட்டுள்ளனர். ஆளுநரின் அறிவிப்பையடுத்து, கோல்டன் பே ரிசார்ட்டில் இருந்து எம்.எல்.ஏக்கள் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!