சொத்துக் குவிப்பு வழக்கில் நீங்கள் எதிர்பார்த்த தீர்ப்பு இதுதானா? #PeopleSurvey #DACase

இளவரசி - சசிகலா - ஜெயலலிதா - சுதாகரன்

1991-96-ம் ஆண்டுகளில் முதல்வராக இருந்த ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்டோர் வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நடைபெற்று, இருபத்தி ஓர் ஆண்டுகளுக்குப் பின் நேற்று, அதன் மேல்முறையீட்டு வழக்கில் வெளியான தீர்ப்புடன் வழக்கும் முடிவுக்கு வந்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க பொதுச் செயலாளரான சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் இளவரசி, வி.என். சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அளித்த தீர்ப்பை உறுதி செய்ததுடன், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவும் குற்றவாளிதான் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்தனர்.  ஜெயலலிதா மரணம் அடைந்ததால் அவரை வழக்கில் இருந்து உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தாலும், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தால் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட 100 கோடி அபராதத்தை அவரது சொத்துக்களை விற்று வசூலிக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவிடம் அமைக்க முடியாது என்றும், அவரது புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் வைக்க முடியாது என்றும் சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்த சர்வே கீழே...

சொத்துக் குவிப்பு வழக்கில் நீங்கள் எதிர்பார்த்த தீர்ப்பு இதுதானா? #PeopleSurvey #DACase

 

1). குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படங்களை அரசு அலுவலகங்களில் வைப்பது? *

2). அரசு செலவில் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைத்து பராமரிப்பது? *

3). அரசு அலுவலகங்களில் உள்ள ஜெயலலிதாவின் படத்தை தமிழக அரசு நீக்கும் என நினைக்கிறீர்களா? *

இந்த சர்வே முடிவினை பிரசுரிக்கும்போது, தங்களுக்கு தகவல் தெரிவிக்க தங்கள் mail ID -ஐ பதிவு செய்யவும்! (optional)

 

...

 

- ஆ.நந்தகுமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!