வெளியிடப்பட்ட நேரம்: 17:42 (16/02/2017)

கடைசி தொடர்பு:17:40 (16/02/2017)

'குடும்ப ஆட்சியை வர விடமாட்டோம்' மாஃபா. பாண்டியராஜன்

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது மாஃபா. பாண்டியராஜன் கூறுகையில், 'குடும்ப ஆட்சிக்கு ஆதரவு அளித்து எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.  குடும்ப ஆட்சி வராமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். சசிகலா பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டது குறித்து, தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம்' என்றார்.

பொன்னையன் கூறுகையில், 'தற்காலிக பொதுச்செயலாளருக்கு எந்த அதிகாரமும் இல்லை, எங்களை பதவி நீக்கம் செய்தது செல்லாது. எனவே அதே பதவியில் நீடிக்கிறோம். பன்னீர்செல்வம்தான் அதிமுகவின் பொதுச்செயலாளராக வரவேண்டும். அதிமுகவின் பொதுச்செயலாளருக்கான வாக்குப்பதிவு தொண்டர்கள் மத்தியில் நடத்தப்படும்' என்றார்.

மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. செம்மலை கூறுகையில், 'நீதி கேட்டு தமிழக மக்களை சந்திக்க பயணம் செல்ல இருக்கிறார் ஓ.பி.எஸ். மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சி விரைவில் அமையும்' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க