அ.தி.மு.க.விலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீக்கம்! மதுசூதனின் அடுத்த அதிரடி

அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா அணியினருக்கு இடையேயான மோதல், நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.

Madhusuthanan

இந்நிலையில், அ.தி.மு.க.வில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீக்கப்படுவதாக மதுசூதனன் அறிவித்துள்ளார். மேலும்,  மக்களவை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, சி.விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், பா. வளர்மதி ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளதாக மதுசூதனன் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே இன்று காலை, சசிகலா, டி.டி.வி. தினகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரை அ.தி.மு.க.வில் இருந்து  நீக்கியதாக மதுசூதனன் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!