Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இது கட்சிக் கருத்து இல்லீங்கோ..!' - பா.ஜ.கவினரின் குபீர் பல்டி

பாரதிய ஜனதா கட்சியில் தொண்டர்களைவிடத் தலைவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பது நாடு அறிந்த விஷயம். ஊர், உலகத்தில் எங்கே என்ன பஞ்சாயத்து நடந்தாலும் அங்கே ஆஜராகி ஒவ்வொரு தலைவரும் தனித்தனியாக அறிக்கைகளை வெளியிட்டு அசரடிக்க வேண்டும் என்பது அந்தக் கட்சியின் எழுதப்படாத விதி போல... தேசியச் செயலாளர்கள் முதல் வட்டாரத் தலைவர்கள் வரை ஆளுக்கொரு கொள்கையில் செயல்படுவார்கள். பாஜகவினரின் கருத்துக்கும் கட்சிக்கும் எள்ளளவும் சம்பந்தம் இல்லை என்பது அவர்களே பலமுறை ஒத்துக்கொண்ட கருத்து. இதோ அவை என்னவென்றுதான் பாருங்களேன்..!

பாஜக

* தமிழிசை ஒரு கருத்தைச் சொன்னால், சுப்பிரமணியன் சுவாமி அதற்கு நேர் எதிர் கருத்தைச் சொல்வார். அந்தப் பக்கம் வானதி ஶ்ரீனிவாசன் இன்னொரு கருத்தைச் சொல்வார். `தெருவுல போற வம்பை இழுத்துத் தோள்ல போட்டுக்கிட்ட கதை'யாக எல்லாத்துக்கும் கருத்துச் சொல்லியே வாங்கிக் கட்டிக்கிறதுதான் இவங்க வழக்கம். எல்லோரும் அவங்களோட கருத்தைச் சொல்றதால பா.ஜ.க-வில் யார் சொல்றது கட்சியோட கருத்துனே தெரியாம குழம்பித்தான் போவோம். இப்போ தமிழக பா.ஜ.க தலைவர் யார்னு யோசிக்காம உடனே சொல்லிடுங்க பார்க்கலாம்...

* சுப்பிரமணியன் சுவாமி எங்க போனாலும் பின்னாடியே ஒரு ஆள் போட்டு `அவரை ஃபாலோ பண்ணுங்க. அவரை வேலை செய்யவிடாம பார்த்துக்கிறதுதான் உங்க வேலை'ன்னு அப்பிரண்டீஸ்களுக்கு அசைன்மென்ட் பிரிச்சுக் கொடுத்திருக்காங்களாம். ஆனாலும், அவங்க அசந்த நேரமா பார்த்து அணுகுண்டை எடுத்து வீசிட்டுக் கிளம்பிடுவார் சுவாமி. அப்புறம் என்ன அவர் சொன்ன கருத்துக்காக வழக்கம் போலவே பா.ஜ.க-வைப் போட்டுப் பொளப்பாய்ங்க.

* `பீட்டாவுக்கு ஆதரவு தருபவர்கள் தேசத்துரோகிகள். நான் என் மாட்டை ஜல்லிக்கட்டில் அவிழ்த்துவிட்டேன்' என கெத்தாகப் பேசி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்க நினைத்தவரை, `மேனகா காந்தி அம்மா.. உங்களை இவர் தேசத்துரோகினு சொல்றாரும்மா...' என மேனகா காந்தியையே போஸ்ட்டில் டேக் செய்து கலாய்த்துப் பதறவிட்டனர் நெட்டிசன்ஸ். `உச்சநீதிமன்ற உத்தரவை மீறி மாட்டை அவிழ்த்துவிட்டவரை இன்னும் கட்சியில் வைத்திருக்கிறதா பா.ஜ.க. ஐயகோ..!' என குபீர் அதிர்ச்சி காட்டி அடிமடியிலேயே கையை வைத்தார்கள். `அய்யய்யோ... அவர்கிட்டேயே போறாய்ங்களே...' ன்னு அழாத குறையாக மொத்த பா.ஜ.க-வும் ஒவ்வொரு தலைவரையும் நினைத்துக் கலங்கி நிற்கிறது.

பா.ஜ.க

* பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டதும், `சசிகலாவைத் தமிழக சிறைக்கு மாற்றணும்'னு சுப்பிரமணியன் சுவாமி ட்வீட் தட்டுறார். புதிதாக முதல்வரான எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி உடனே வாழ்த்துச் சொல்றார். இப்போ முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை அவரோட வீட்டிலேயே போய் சந்திச்சு வந்திருக்கார் எச்.ராஜா. ஏற்கெனவெ, ஓ.பி.எஸ்ஸை வழிநடத்துறதே பி.ஜே.பி தான்னு ஒரு கருத்து பயங்கரமா பரவிக்கிட்டிருக்கு. இந்த நேரத்தில் எதிரும் புதிருமா கருத்தைச் சொல்லி தங்களுக்குத் தாங்களே அணை கட்டிக்கிட்டு இருக்காங்க. எச்.ராஜாவின் இந்தச் சந்திப்புக்கும் பா.ஜ.க கட்சிக்கும் சம்பந்தம் இல்லைன்னு விரைவில் அறிக்கை வந்தாலும் பரவாயில்லை. `மோடி வாழ்த்துச் சொன்னதுக்கும் பா.ஜ.க வுக்குமே சம்பந்தம் இல்லை'ன்னு சொல்லிருவாங்களோன்னு நினைச்சாதான் லைட்டா தொண்டையைக் கவ்வுது.

* மனசுல தோணுறதைச் சொன்னாலும், `இது அவரோட சொந்தக் கருத்து'னு சொல்றதுக்கே ஆள் போட்டிருக்காங்க. அப்புறம் என்ன கவலை? குறிவைக்கிற அம்புகளை எல்லாம் அசால்ட்டா விலக்கி விட்டுட்டுப் போய்க்கிட்டே இருக்கலாம். இந்த டெக்னிக்கைத்தான் இப்போ எல்லாக் கட்சிகளும் ஃபாலோ பண்றதா ஒரு தகவல் வந்துக்கிட்டு இருக்கு.

ஆஹா... `இது எங்க கட்சியின் கருத்து இல்லை'ன்னு யாராவது அறிக்கை தட்டுவாங்களோன்னு யோசிச்சாதான் கண்ணைக் கட்டுது.

- விக்கி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close