பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் திடீர் கைது

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக வாக்காளர் பேரணி நடத்த முயன்றவர்களை போலீஸார் கைது செய்தனர்.

தமிழ்நாட்டில் சசிகலா தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்,  எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைத்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் 'வாக்காளர் பேரணி நடத்தி பொதுமக்களிடம் ஆதரவு திரட்டுவேன்' என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அறிவித்தார். அதன்படி மதுரை  பழங்காநத்தத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக, அ.தி.மு.க.வினர் வாக்காளர் பேரணி நடத்த முயன்றனர். அப்போது, போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!