அதிகாரிகளுடன், கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை!

தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். 

எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில், நாளை சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூறி உள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமக்கு 124 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதாகச் சொல்லி உள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க 117 எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கையே போதுமானது. இந்நிலையில், தலைமைச்செயலகத்தில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உளவுத்துறை ஐஜி, டிஜிபி, உள்துறைச் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், சட்டம் - ஒழுங்கு குறித்தும்  உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!