வெளியிடப்பட்ட நேரம்: 18:25 (17/02/2017)

கடைசி தொடர்பு:19:38 (17/02/2017)

எடப்பாடிக்கு எதிராக வாக்களிக்க திமுக, காங்கிரஸ் முடிவு!

தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், நாளை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது.  இந்நிலையில், திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு, அக்கட்சி செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

DMK

இந்தக் கூட்டத்தில், நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது, நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கலந்து கொள்வது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளது. இன்று நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க