வெளியிடப்பட்ட நேரம்: 19:14 (17/02/2017)

கடைசி தொடர்பு:19:38 (17/02/2017)

ரகசிய வாக்கெடுப்பை தி.மு.க வரவேற்கும்! - மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக திமுக வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

சென்னையில் பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில், நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் அதிமுகவுக்கு எதிராக வாக்களிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து, பொதுமக்களின் வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். அதிமுக ஆட்சிக்கு ஒட்டுமொத்த எதிர்ப்பையும் தெரிவிக்கும் வகையிலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களிக்க திமுக முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டதுபோல், ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், அதனை திமுக வரவேற்கும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க