வெளியிடப்பட்ட நேரம்: 06:09 (18/02/2017)

கடைசி தொடர்பு:10:37 (18/02/2017)

எண்ணூர் விபத்தால் கடலூரிலும் பாதிப்பு #ChennaiOilSpillReflection

ண்ணூர் அருகே  இரண்டு சரக்குக் கப்பல்கள் மோதி, விபத்துக்குள்ளானதால், கடலில் பரவிய எண்ணெயால் அந்தப் பகுதியில் மீன் விற்பனை மந்தமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மேலும், அந்த எண்ணெய்ப்படலம் கடலூர் மாவட்ட கடற்கரைப்பகுதியிலும் தற்போது பாதிப்பை ஏற்படுத்தத் துவங்கியுள்ளது.

இதனால், கடலூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள கடற்கரைக் கிராமங்களான தாழங்குடா,தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம் உட்பட பல்வேறு கிராமங்கள், இந்த மாசுபட்ட எண்ணெய்ப்படலத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.  இந்த எண்ணெய்ப் படலத்தால், கடலில் வாழும் மீன்கள் பாதிப்பு அடையாதபோதிலும், இந்தப் படலத்தைக் காரணம் காட்டி, மக்கள் கடல் மீன்கள் வாங்குவதைக் குறைத்துள்ளனர். இது, அந்தப் பகுதி மீனவர்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கடலூர் மாவட்ட அதிகாரிகள், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க